மாட்ரிட்: ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.
உலகையே கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 1 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, 2,227 பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அதிகபட்ச உயிரிழப்பை கொண்டுள்ள நாடுகளில் இத்தாலி முன்னிலையில் உள்ளது. அங்கு 92 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 10,023 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டிலும் பரவிய கொரோனா தொற்றால், அந்நாட்டு இளவரசி மரியா தெரசா (வயது 86) பாதிக்கப்பட்டு, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்தார். வைரஸ் தொற்றின் காரணமாக அவர் உயிரிழந்தார். அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனாவால் பலியானது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.