Fastag: ஃபாஸ்டேக் பாதையில் சென்றவர்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது தெரியுமா

சுங்கச்சாவடிகளில் 'ஃபாஸ்டேக்' பாதையில் 'ஃபாஸ்டேக்' அட்டை இல்லாமல் சென்ற 18 லட்சம் பேரிடமிருந்து ரூ.20 கோடியை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) அபராதம் வசூலித்துள்ளது.


ஃபாஸ்டேக் திட்டத்தில் இணைவதன் மூலம் சுங்கச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல் செல்லலாம். அங்கு செலுத்த வேண்டிய தொகை ஏற்கெனவே பணம் செலுத்தி நாம் பெற்றுள்ள ஃபாஸ்டேக் அட்டையிலிருந்து தானாகச் செலுத்தப்படும். இந்தத் திட்டம் தற்போது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் 350 சுங்கச் சாவடிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.


ஃபாஸ்டேக் வழியில் டேக் இல்லாமல் வாகனங்கள் சென்றால் சுங்கக் கட்டணம் இரட்டிப்பாக வசூலிக்கப்படும். இவ்வாறு ரூ.20 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.