சும்மா கிழி பாடலுக்காக வெயிட்டிங்கில் இருக்கும் ரஜினி ரசிகர்கள்!

ரஜினியின் அறிமுக பாடலை யார் பாடுவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒரு படத்தில் ரஜினியின் அறிமுக காட்சி எந்தளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அவரது எண்ட்ரி சாங்கும் அப்படித்தான். இதற்கு முன்னதாக வந்த அண்ணாமலை, படையப்பா, பாட்ஷா ஆகிய படங்களில் ரஜினியின் எண்ட்ரி சாங் சும்மா மாஸாகவே இருந்தது. இந்த படங்களில் எஸ்பிபி பாடிய பாடல்கள் இன்றும் ரசிகர்களுக்கு விருந்துதான்.