10 பேரும் டக் அவுட்.. 754 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. அடித்து நொறுக்கிய ரோஹித் சர்மா ஸ்கூல்! Read more at: https://tamil.mykhel.com/cricket/mumbai-school-team-failed-creepily-as-all-the-batsmen-gone-for-duck-017655.html

மும்பை :


மும்பையில் பள்ளிகள் இடையே ஆன கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றில் ஒரு அணியின் அத்தனை பேட்ஸ்மேன்களும் டக் அவுட் ஆன பரிதாப நிகழ்வு நடந்தேறி உள்ளது. எதிரணி 754 ரன்கள் வித்தியாசத்தில்


இமாலய வெற்றி பெற்றது. இந்தப் போட்டி டெஸ்ட் போட்டியும் அல்ல. 45 ஓவர் போட்டி. அதில் தான் இத்தனை பெரிய வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துள்ளது.

மரண அடி வாங்கிய அந்த பள்ளி - சில்ட்ரன் வெல்ஃபேர் பள்ளி. மெகா வெற்றி பெற்ற பள்ளி சுவாமி விவேகானந்த் இன்டெர்நேஷனல் பள்ளி. இந்தப் பள்ளியில் தான் அதிரடி துவக்க வீரர் ரோஹித் சர்மா படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.